Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா, ஹெரோ தோட்டத்திலுள்ள பாலமொன்று வெடிப்புக்குள்ளான நிலையில் காணப்படுவதால், அப்பாலத்தினூடாகப் பயணிப்பதில் தோட்ட மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தப் பாலமானது, 20 வருடங்களாக வெடிப்புக்குள்ளான நிலையிலேயே பயன்படுத்தப்பட்ட வந்தது எனினும் பாலத்தின் வெடிப்பு மேலும் விரிசலடைந்துள்ளதால், பாலத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது இருபக்கமும் எவ்விதப் பிடிமானம் இன்மையால், இரவு வேளைகளில் பலர் பாலத்தைக் கடக்க முற்பட்டுத் தவறி ஆற்றில் விழுந்துள்ளனர் என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே உயிர்ச்சேதங்கள் ஏற்படும் முன்னர், அரசியல்வாதிகளோ, கொத்மலை பிரதேச சபையோ கவனம் எடுத்து, பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு ஹெரோ தோட்டமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago