Editorial / 2026 மார்ச் 25 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

"சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை." என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
'டிட்வா' புயல் காரணமாக நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் புதன்கிழமை (25) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் நுவரெலியா மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நுவரெலியா ஹாவாஎலிய 'சிட்டி சந்தி' பகுதியில் இடம்பெற்றது.
"முந்தைய ஆட்சிக் காலங்களைப் போலன்றி, நாங்கள் வெற்று அடிக்கல்களை நாட்டுவதில்லை. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பணிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடையும். அதன் திறப்பு விழாவிற்குக்கூட நாங்கள் வரமாட்டோம்; இதுவே எமது புதிய அரசியல் கலாசாரம்." என்றும் அவர் தெரிவித்தார்.
"நாட்டில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் சர்வதேச மோதல்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகின்றன. மீண்டும் நாடு அவர்கள் கைக்குச் சென்றால் ஏற்படக்கூடிய விபரீதங்களை மக்கள் நன்கு அறிவார்கள்." .






10 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
48 minute ago