2026 ஜனவரி 21, புதன்கிழமை

அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2021 மே 20 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மின்சாரம் வழங்கல், நீர் வழங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, இ.தொ.காவின் உப-தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.பழனி சக்திவேல் தலைமையில், நேற்று  (19) முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந் நிகழ்வில், தோட்ட அதிகாரியும் தோட்ட பொது மக்களும் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X