Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் கிராம மட்டங்களில் வாழும் மக்கள், தமது கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அமைப்பு ரீதியாக ஒன்றுபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தொரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஹட்டன் ரொத்தஸ் கிராமத்தில் புனரமைக்கபட்ட நடைபாதையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தோட்டப்பகுதிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் தொழிற்சங்க அமைப்பு ரீதியாக செயற்படுகின்றனர். தாம் சார்ந்த தொழிற்சங்கங்கள் ஊடாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு சில அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
ஆனால், கிராமங்களில் அவ்வாறு இல்லை. தேர்தல் காலங்களில் மாத்திரமே இம்மக்களை நாடி அரசியல்வாதிகளும் வேட்பாளர்களும் வாக்கு கேட்பதற்கு வருகின்றனர். தேர்தல் முடிவடைந்ததும் இம்மக்களின் தேவைகளை அறிவதோ பூர்த்தி செய்வதோ இல்லை.
இவ்வாறான நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த பலர்,
அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து எமக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். இதனை கருத்திற் கொண்டு தொடர்ந்து வரும் காலங்களில் நுவரெலிய மாவட்டத்தின் நகரங்கள் மற்றும் தோட்டங்களை அண்டிய கிராமங்களிலும் பாதை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சனசமூக நிலையங்களை ஏற்படுத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அந்த அடிப்படையில் ஹட்டன் ரொத்தஸ் கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், பாதைகளை அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். தொடர்ந்து வரும் காலங்களிலும் அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனையின் அடிப்படையில் கிராமங்களிலும் மக்களுக்கான பல்வேறு சேவைகளை செய்ய நாம் காத்திருக்கின்றோம்' என்றார்.
18 minute ago
18 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
18 minute ago
57 minute ago
1 hours ago