R.Maheshwary / 2022 ஜூன் 21 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப் பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் எரிபொருள் விநியோகம் சிறிது நேரம் தடைபட்டது.
ஹப்புத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டதால், காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு - ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


7 minute ago
9 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
36 minute ago
41 minute ago