2026 மே 01, வெள்ளிக்கிழமை

‘அம்பகமுவ பிரதேசத்துக்கு கம்பெரலிய திட்டம் இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

 

நாட்டில் பல பகுதிகளிலும், கம்பெரலிய ​வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்தாலும், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அம்பகமுவ பிரதேசத்தில், கம்பெரலிய வேலைத்திடம் முன்னெடுக்கப்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்குழுவின் இணைத்தலைவர்களான. அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச தலைமையில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த, அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் ஆர்.டி.பி சுமணசேகர,

கம்பெரலிய வேலைத்திட்டத்துக்குத் ​தேவையான நிதி, தமக்கு இன்னும் கிடைக்கவில்லை ​என்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட

பிரச்சினைகள் காரணமாக, இந்தத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், இத்திட்டம் தொடர்பில் உத்தேசிக்கப்பட்டபோது, அதைச் செயற்படுத்த தமக்கு தொழில்நுட்ப அலுவலர்கள் இருக்கவில்லை என்றும் இது, இத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .