2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அம்மன் கோவில் உடைப்பு: திருடர்களுக்கு வலைவீச்சு

Freelancer   / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூண்டுலோயா - சீன் தோட்டத்தில் அம்மன் கோவில் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

சுமார் 13 பவுண் அம்மன் தாலி பொட்டு உட்பட உண்டியல் காசும் திருடப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தோட்ட கோவில் கமிட்டி உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட தலைவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

அதற்கமைய பூண்டுலோயா பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X