Freelancer / 2023 மார்ச் 03 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அரச பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா வெஸ்வாடோ டொப்பாஸ் பகுதியில் இன்று (03) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி போட்டி போட்டு பயணித்த தனியார் பேருந்தும் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்துக்கு வழிவிடும் போது தனியார் பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் அரச பேருந்துடன் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago