2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

 

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டவலை, கொட்டகலை, லிந்துலை, நானுஓயா மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி, மூன்று தினங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையிலேயே,  நுவரெலியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள்,    இவ்வாறு  பணிப்பகிஷ்கரிப்பில், இன்று ஈடுபட்டனர்.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .