Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், நதீக தயா பண்டார
தனது எதிர்கால அரசியல் பயணத்தைத் தடுக்கும் நோக்கில், பழிவாங்கும் அரசியல்படலமொன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தொன்றில், முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி ஆகியோர் தொடர்புபட்டதாக கூறப்படும் வழக்கு தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிந்த அந்த வழக்கை, மீளவும் கிளறுவது, தன்னை அரசியல் பழிதீர்ப்பதற்கே என்று அவர் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு இன்று (18) விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், மல்வத்துபீட மஹாநாயக்கரை சந்தித்து ஆசிப்பெற்றுக் கொண்டதுடன், இவ்வழக்கு தொடர்பில், மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
விபத்துத் தொடர்பிலான வழக்கு முடிவுக்கு வந்துள்ள போதிலும், அதை மீளவும் கிளறி தன்னை அரசியல் பழிதீர்க்கவே முனைகின்றனர் என்றுக் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், விபத்துடன் தொடர்புடைய சீ.சீ.டீ.வீ காட்சிகள் அழிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவ்வாறான ஒரு விடயத்தை தன்னால் செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பியதுடன், அந்தக் குற்றசாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago