Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கௌசல்யா
எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் சுமார் 30 வருடங்களாக தனது பாதுகாப்பில் வைத்திருந்த ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான லிந்துல ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் நீதிமன்ற பதிவாளர், பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் வியாழக்கிழமை (05) ஒப்படைக்கப்பட்டது.
தோட்டத்தின் பிரதான எழுத்தராக 1987 ஆம் ஆண்டு அரவிந்த குமார் பணியாற்றிய போது, தோட்ட நிர்வாகம், இந்த இல்லத்தை அரவிந்த குமாருக்கு உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துவதற்கு வழங்கியது, அரவிந்தகுமார் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் தோட்டத்திற்கு ஒப்படைக்காது, அதிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தினால், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பில், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து . உயர் நீதிமன்றத்தில் அரவிந்த குமார் மேல்முறையீடு செய்திருந்தார். வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
எனினும், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில், மேற்படி நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட பிஸ்கல் உத்தியோகத்தர்கள் லிந்துலை பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உத்தியோகபூர்வ இல்லகத்துக்குச் சென்று அரவிந்த குமாருக்கு சொந்தமான அனைத்து உடமைகளையும் பட்டியலிட்டனர். வீடு மற்றும் அதன் நகலை நீதிமன்ற காவலில் வைத்து, வீடு மற்றும் உடமைகள் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அரவிந்த குமார், அரசியலுக்கு வந்ததிலிருந்து, அரசியலின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் நீண்ட காலம் தங்கியிருந்ததாக ஹென்ஃபோல்ட் தோட்டத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம், தோட்டத்தில் பணிபுரியும் மற்றுமொரு அதிகாரிக்கு உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
32 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago