Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அற்பச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்காக்கூட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளதாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் டெலோ அமைப்பின் மூத்த உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் இருப்பை – பாதுகாப்பை உறுதிப்படுத்தி தீர்வு திட்டங்களை முன்வைக்க கூடிய ஜனாதிபதி வேட்பாளரையே தமிழ் பேசும் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அதற்கான எழுத்துமூல உத்தரவாதத்தை வாங்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அதனை இடைக்கால தீர்வாகக் கருதி நிலையான தீர்வைப்பெற முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், மலையக மக்களுக்கு, பல்வேறு பிரச்சினைகள் உள்ளன என்றும் 10 தசாப்தங்களுக்கு மேலாக அவை தீர்க்கப்படாதுள்ளன என்றும் சுட்டிக்காட்டியதுடன், அபிவிருத்திகள் கிடைப்பதற்கே இவ்வளவு தாமதமெனில், உரிமைகள் எப்போது கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
“புதிதாக பிரதேச செயலகங்கள் சில உருவாக்கப்பட்டுள்ளன. தனி வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நடைபெறவில்லை. லயன் வாழ்க்கைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. அற்ப சம்பளத்துக்குகூட தொழிலாளர்கள் போராடிவேண்டியுள்ளது. மாற்று பொறிமுறை முன்வைக்கபடவில்லை” என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago