Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 03 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஆராச்சி
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் கேகாலை மாவட்ட பிராந்திய அலுவலகம் தெஹியோவிட்ட- ஈரியகொல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (1) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் உள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய அலுவலகம் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையால் திறந்து வைக்கப்பட்டது.
கேகாலை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர், அவர்களில் 20 ஆயிரம் பேர் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ்வாறு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் காணப்படுகின்றனர்.
கேகாலை மாவட்டத்தில் 16 ஆயிரம் ஹெக்டேயரில் தேயிலை பயிரிடப்படும் நிலையில், இதில் 10 ஆயிரம் ஹெக்டேர் துன்கோரல பகுதியில் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025