Editorial / 2019 ஜூன் 30 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கிரிந்த கடற்பரப்பில் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடலில் மூழ்கியதால், தந்தையும் இரு மகள்களும் உயிரிழந்தனர். இ்ச்சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட தாய் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து குடும்பத்துடன் யால பகுதிக்கு சுற்றுலா சென்ற போதே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகள்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் போது, 29 வயதான தாய் காப்பாற்றப்பட்டு திஸ்ஸமஹராம, அம்பாறை வைத்தியசாலைகளிலும் பின்னர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

2 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
52 minute ago
3 hours ago