Janu / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி கட்டுநாயக்க விமான நிலையத்தை, திங்கட்கிழமை (16) வந்தடைந்தார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 09/09 முதல் 09/16 வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-365 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கண்டி, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி.கபில

26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago