சிவாணி ஸ்ரீ / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அழகிய சப்ரகமுவ” திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு 360 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதியில், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் கட்டடங்கள், மலசலகூடங்கள், தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு வேலி, கட்டடங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேற்படி மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு நிதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், சமீபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண முன்னால் அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குறுப்பு ஆராச்சி உட்பட அரச அதிகாரி பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அகியோர் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago