2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அழைக்காமைக்கு எதிராக கறுப்புப் பட்டி போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களுக்கு, இதுவரை தனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றுத் தெரிவிக்கும் குறித்த பிரதேச சபை உறுப்பினரான ஹேலபிரிய நந்தராஜ, பிரதேச செயலகத்துக்கு முன்னால், இன்று (08) கறுப்புப் பட்டியணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அம்பகமுவ பிரதேச செயலகத்தின் மாதாந்த அபிவிருத்திக் குழுக்கூட்டம், இணைத் தலைவரான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச தலைமையில், நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், ​ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான மேற்படி உறுப்பினர், தன்னை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, மேற்கண்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி உறுப்பினர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால், பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்கேற்போரின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியல், பிரதேச சபைத் தவிசாளரூடாக, பிரதேச செயலகங்ளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரதேச சபைத் தவிசாளரின் உத்தரவுக்கு அமைய, அப்பட்டியலில் தனது பெயர் உள்வாங்கப்படவில்லை என்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றால் மட்டுமே, ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் பங்கேற்க முடியுமென்றும் எனவே, தனது பிரதேசத்தின் குறை - நிறைகளை, உரிய சபைக்குக் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம், தனக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .