2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்த பென்றித் தோட்ட மக்கள்

R.Maheshwary   / 2021 நவம்பர் 18 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

அவிசாவளை- பென்றித்  தோட்ட அதிகாரியின் செயற்பாடுகளையும் அராஜகத்தையும் கண்டித்து, குறித்த தோட்ட மக்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்ட அதிகாரி, தோட்ட குடியிருப்புக்குள் சென்று ஒரு தொழிலாளியின் சமையலறையை உடைத்து, அந்த வீட்டில் வயதான தாய் ஒருவரை அடித்ததால், அந்தத் தாயின் மூன்று மகன்களும் தோட்ட அதிகாரியை தாக்கியுள்ளனர்.

 இந்த சம்பவம் 16ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று (17)   தோட்ட அதிகாரி இனம் தெரியாதவர்களை அழைத்து வந்து, அந்த சமையலறையை மீண்டும் உடைத்துள்ளார்.

இதன் காரணமாக, அங்கு நேற்று (17)  இரவு அமைதியின்மை ஏற்பட்டது. அதன் பிறகு அவிசாவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை அவிசாவளை- கொழும்பு பிரதான வீதியில், கிரிவல சந்திக்கு அருகில் பேரணியாக சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .