Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள், அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது முகம்கொடுக்கின்ற பிரச்சினைக்கு ஒரு சில தினங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி .ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலைகளில் கடமையாற்;றும் ஆசிரிய உதவியாளர்களை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
அதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாணத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு மாணவர்களை உள்வாங்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்காக ஆசிரியர் உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தற்பொழுது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கின்றனர்.
குறித்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் பொழுது அந்த வலயக் கல்வி பணிமனையின் வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆனால், தற்பொழுது அனைத்து மாகாணங்களிலும் வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு விண்ணப்பங்களை விண்ணப்பதாரிகளுக்கு வழங்கி வைக்கின்றனர். ஊவா மாகாணத்தில் குறித்த அதிகாரிகள் கையெழுத்திட மறுப்பதாக விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்களுக்கு எதிர்வரும் 2016 ஆம் வருடம் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்து தருமாறும் ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இது தொடர்பாக தான் ஒரு சில நாட்களில் தீர்வு ஒன்றை அதாவது அவர்களுக்கு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த உதவி ஆசிரியர்கள் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு செல்லும் பட்சத்தில் பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாகவே தாங்கள் கையெழுத்திடுவது தொடர்பில் சிக்கலான ஒரு நிலையை சந்தித்துள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago