2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆசிரியையின் நிர்வாண படம்: மாணவர்கள் இருவர் கைது

Editorial   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் பெண் ஆசிரியை ஒருவரின் முகத்துக்கு  நிர்வாண புகைப்படத்தை இணைத்து  சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மாத்தளை விஜய வித்தியாலயத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தில் இருந்து மாத்தளை விஜய வித்தியாலயத்திற்கு ஒரு வருட பயிற்சிக்காக சென்ற இளம் பெண் ஆசிரியையின் முகத்துக்கு நிர்வாண புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.  

குறித்த இளம் ஆசிரியை, அந்த பாடசாலைக்கு நடன ஆசிரியையாக பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டதுடன், அவரின் நிர்வாண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து, மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த பாடசாலையின் 10ஆம் வருட மாணவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X