2025 மே 12, திங்கட்கிழமை

ஆட்டுப்பட்டியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2023 ஜூலை 02 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நோர்ட்டன் பிரிட்ஜ், கொத்தேலேன முருத்தன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 தமது வீட்டில் ஆட்டுத் தொழுவத்தில்  தொங்கிய நிலையிலேயே தனது மகன் சடலமாக சனிக்கிழமை  (01) மாலை மீட்கப்பட்டுள்ளார் என அச்சிறுவனின் தாய் தெரிவித்தார்.

 13 வயதான எஸ். பிரதாப்சின் என்ற சிறுவனனே உயிரிழந்துள்ளதாகவும்,   சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.  

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X