2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆண் சிசுவின் சடலம் மீட்பு

Sudharshini   / 2016 மே 02 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலத்தை  இராகலை, ஹைப்பொரஸ்ட் இல -01 தேயிலை மலையிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை (01) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசுவின் சடலம் சிதைவுண்ட நிலையில் காணப்பட்டதென பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதேவேளை, சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .