2026 மே 09, சனிக்கிழமை

dd

ஆதரவு வழங்காமையால் பிரயாணங்களுக்குத் தடை

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்‌ஷ, சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டனிலிருந்து கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளுக்குச் சேவையில் ஈடுபடும்,  ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை, சிலர் வழிமறித்து, பயணத்த​டை ஏற்படுத்தினர் என்று ஹட்டன் டிப்போவின் சேவை முகாமையாளர் ரோஹன டீ சில்வா தெரிவித்தார்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்துள்ள கம்பளை டிப்போ ஊழியர்கள், அந்த பஸ்ஸை மீண்டும் ஹட்டனுக்கே திருப்பியனுப்பியுள்ளனர்.

அதேபோன்று, ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை அவிசாவளை டிப்போ ஊழியர்கள் வழிமறித்து, திரும்பிப் போகுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும், கரவனெல்ல, நிட்டம்புவ ஆகிய குறுக்கு வீதிகளூடாகப் பயணித்து, கொழும்பு- கண்டி பிரதான வீதியூடாக, அந்த பஸ் கொழும்புக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதியக் கொடுப்பனவை கோரி, நாடுமுழுவதும் இ.போ.ச பஸ் சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்று (18) ஹட்டன் டிப்போ பணியாளர்கள் எவரும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்காதமையாலேயே, இவ்வாறு பயணங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .