Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில், அவசரத் தீர்மானம் எடுக்க முடியாது என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புளத்கொஹோபிட்டிய - கேகாலை பிரதான பாதை காப்பட் இடும் பணி, இன்று (08), ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் கபிர் ஹாசிம், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
ஆனால், எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்மானம் எடுப்பதில், தங்களால் அவசரப்பட முடியாதுஎன்றும் ஆனால், சரியான தலைவரை தெரிவு செய்வதற்கான காலம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், 2020க்கு பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கீழான ஒரு அரசாங்கத்தை அமைக்க, சரியான வேட்பாளரைத் தெரிவு செய்து, அரசாங்கத்தைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
25 minute ago
32 minute ago