Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 11 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல விபத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திக்காக ம்ருத்யுஞ்ஜய ஹோமம், திங்கட்கிழமை (09) நடத்தப்பட்டது.
அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் மேலும் இறம்பொடை பிரதேசத்தின் இயற்கை அனர்த்தங்கள், ஏனைய விபத்துகளில் இறந்த அனைத்து உயிரினங்களுக்காகவும் ஆத்ம சாந்திக்கான ம்ருத்யுஞ்ஜய ஹோமம், பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள ஆற்றங்கரையில் நடைபெற்றது.
இந்த மனிதாபிமான செயலை யாழ்ப்பாணம் சாய் குலத்தை பிறப்பிடமாகவும் கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொத்மலை பனம்கம்மான கரகஸ்தலாவில் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாய்குல அறக்கட்டளைகள் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான திருவாளர் தேவேந்திர குமாரசாமி திருக்குமரன் ஐயாவின் சொந்த செலவில் நடாத்தப்பட்டது.
கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கி மே. 11 ஆம் திகதியன்று சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் வைத்து அதிகாலை 4 மணியளவில். சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025