2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆயுதத்துடன் தலைமறைவாகியவர் குறித்து 200பேரிடம் விசாரணை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து, பின்னர் தலைமறைவாகிய நபர் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து இதுவரை 200 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த மேற்படி நபர், தாயும் மகளும் மட்டுமே வாழ்கின்ற வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைந்திருந்துள்ளார். அவரைக் கண்ட அவ்வீட்டிலிருந்த 29 வயதான யுவதி, கூச்சலிட்டதை அடுத்தே அந்நபர் தப்பியோடியுள்ளார்.

கொட்டகெத்தென பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவிரவாக செல்லும் பொலிஸார், வீடுகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையொப்பமிடுவர்.

பொலிஸார் அவ்வாறு கையொப்பமிட்டு சென்றதன் பின்னர், குறித்த சந்தேகநபர் அந்த வீட்டுக்கு அருகில் வந்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்த சம்பவத்தை அடுத்தே அங்கு மரணபயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

கொட்டகெதன பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி, அங்கு பொலிஸ் விசேட படையணியினர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X