R.Maheshwary / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொள்ள ஆயிரம் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, மேலும் ஒரு பிரச்சினையாக வானத்தைத் தொட்டு செல்லும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
முழு நாடும் முடக்கத்தில் இருக்கின்ற காலப்பகுதியில் அரசாங்க உத்தியோகஸ்த்தர்களுக்கு வீட்டிலிருந்தவாறே சம்பளம் சென்றடைகின்றது. ஆனால் மலையக பெருந்தோட்ட மக்கள் வேலைக்குச் சென்றால் ஒழிய அன்றாட ஊதியத்தை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 2,000 ரூபாய் கொடுப்பனவு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணப் பொதிகள் மலையக மக்களுக்கு இன்றளவும் எட்டாக் கனியாகவே உள்ளது என்றார்.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago