2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆயிரம் ரூபாய் பற்றி கதைத்தாலும் 2,500 ரூபாய் தேவையாக இருக்கின்றது

R.Maheshwary   / 2022 ஜூன் 21 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்தும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவாலும்  ஊதிய பற்றாக்குறையினாலும் பெருந்தோட்ட மலையக மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பற்றி நாம் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப குறைந்தது ஒரு நாளைக்கு 2500 ரூபாய் தேவைப்பாடு இருக்கின்றது என்றார்.

நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

உணவுக்கு மட்டுமே இவ்வாறு என்றால் ஏனைய சுகாதாரம் மற்றும் கல்வி போக்குவரத்திற்கு இன்னமும் செலவுகள் அதிகரிக்கும். ஆகவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் நிலையான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஒருநாள் பாராளுமன்றம் கூடுவதற்கு 80 இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. அவ்வாறு கூடுகின்ற பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

எதிர்க் கட்சியும், ஆளும்கட்சியும் குறைகூறிக் கொள்வது மட்டுமே அங்கே நடக்கின்ற நிலையில், பாராளுமன்றத்தை இணைய நிகழ்நிலையில் நடத்துவதே சாலச்சிறந்தது என்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X