R.Maheshwary / 2021 நவம்பர் 23 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு, குறைவாக கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும் இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அதிகாரிகளும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்ததுடன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும் தேயிலை மலைகளை துப்பரவு செய்யுமாறும் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு தோட்ட நிர்வாகம் இணங்கியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago