Janu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ பல்கலைக்கழக, விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவி ஒருவரையும், இரு மாணவர்களையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்ட ஏனைய சிரேஷ்ட மாணவர்கள் 6 பேரையும் வியாழக்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொட நீதவான் ஹெஷானி ரொட்ராகோ உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு உணவகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 7 சிரேஷ்ட மாணவர்களையும் புதன்கிழமை (14) பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களையும் வியாழக்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago