Kogilavani / 2017 ஜூன் 19 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்கவில்லை.
“நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், எனது ஆலோசனைகளுக்கும் எனது மனிதாபிமானச் செயலுக்கும் மதிப்பளிக்கவில்லை என்றால், அவ்வாறானதொரு பதவி எனக்குத் தேவையே இல்லை. அதனால், அப்பதவியைத் துறக்க, நான் தயார்” என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்ததுடன், தனது இராஜினாமாக் கடிதத்தை, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான ஆறுமுகன் தொண்டாமன் எம்.பி மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரியவருகின்றது.
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago