Janu / 2026 மார்ச் 04 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை, பட்டியகெதர எனசல்பெத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய லக்ஷ முதியன்சேலாகே வசந்த பிரியதர்ஷன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், தனது பிள்ளையுடனும் வயோதிப தாயுடனும் பட்டியகெதர ஏனசல்பெத்த வீட்டில் வசித்து வந்ததாகவும், இவரது மனைவி வெல்லவாய பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வழமை போன்று செவ்வாய்க்கிழமை (3) காலை விவசாயப் பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியேறிய அவர், மீண்டும் வீடு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago