R.Maheshwary / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்ட யாக்கத்திற்கும் (SLSPC) இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,
இக்குழு கலந்துரையாடலில் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக செலுத்தப்படாத இருந்த ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் அவர்களின் சேவை கால கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் இணைக்க பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது என்றார்.
எமது வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பக் கட்டமாக 100 ஹெக்டயர் தேயிலை மீள்நடுகை மேற்கொள்ளவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டு, இவ்வாரம் முதல் அதனை துரிதக் கதியில் செயல்படுத்தவும் கலாபொக்க மற்றும் கோமர தொழிற்சாலைகளை மீள் திறக்கவும் இணக்கம் காணப்பட்டது என்றார்.
இப்பகுதிகளில் உல்லாச பிரயாணிகள் அதிகமாக வரும் பகுதிகளில் எமது இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் அவர்களின் சந்தை படுத்தலுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளும் வேலை திட்டத்திற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்ட முகாமைத்துவத்தினால் தான்தோன்றித்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள கொழுந்து பறிக்கும் அளவை அத் தோட்டங்களில் உள்ள தோட்ட முகாமைத்துவமும் கமிட்டியும் கலந்துரையாடி தீர்மானிக்கவும் முடிவுகள் எட்டப்பட்டது என்றார்.
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago