ஆ.ரமேஸ் / 2020 மார்ச் 17 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸட், வேட்பு மனுவை இன்று (17), நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில், இந்த வேட்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட சீ.பி.ரத்நாயக்கா, நிஹால் பியதிஸ்ஸ உள்ளிட்ட பலருடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரையும் கலந்துகொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்டத் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago