Kogilavani / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளையிலிருந்து தெமோதரை வழியாக ஒதம்பை தோட்டத்துக்கு சேவையில் ஈடுபட்டு வந்த இ.போ.ச பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளைப் பிராந்திய முகாமையாளருக்கு, அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், பதுளையிலிருந்து தெமோதரை வழியாக பெருந்தோட்டத்துக்குச் செல்லும் பாதை, ஏற்கெனவே பஸ் போக்குவரத்துக்கு உகந்ததல்லவென்று தெரிவித்து இடைநிறுத்தப்பட்டது.
இப்பாதை தற்போது 'காபட' பாதையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையிலும்கூட பஸ் சேவை இடம்பெறுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பிரதேச மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிரதேச மக்களின் நலன்கருதி, மேற்படித் தோட்டத்துக்கான பஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago