Kogilavani / 2021 மே 18 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு ஊவா மாகாணத்தில், இணையத்தளத்தின் மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதுத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு, கல்விக் குழுக் கூட்டம் என்பன ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில், மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலையால், பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அந்த சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்தல் மற்றும் முன்னோக்கிப் பயணித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன டேனிபிடிய, ஊவா மாகாண பிரதான செயலாளர் பி.டீ. விஜயரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி சந்தியா அம்பன்வெல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago