Sudharshini / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் 20 உறுப்பினர்களும் நுவரெலியா மாவட்ட ஊடகவியளாலர் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய மலையகத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வரலாற்று சிறப்பு மிக்க சீத்தா எலிய சீதை அம்மன் ஆலயத்துக்கு சென்று விஷேட பூஜைகளில் கலந்துகொண்ட இவர்கள், வரலாற்றுமிக்க ஆலயத்துக்கு வருகை தந்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும், 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களின் சம்மேளனத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், தலவாக்கலை பிரதேச முன்னாள் தலைவர் அசோகசேபால நுவரெலியா ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயகார, செயலாளர். எஸ். தியாகு, பொருளாலர் ரஞ்சித் ராஜபக்ஷ, அமைப்பாளர் பா.திருஞானம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago