Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 25 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) அன்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை - ஹாலி எள்ள திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவனின் தாய் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகின்றன.
தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது ஒரே மகனை இராகலையில் சென் லெணாட்ஸ் தோட்டத்தில் உள்ள ஆச்சியின் அரவணைப்பில் விட்டுள்ளனர்.
மேலும் ஆச்சி இராகலை உயர் நிலை பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றார்.
சிறுவன் காணாமற் போன தினத்தன்று மாலை 05 மணிக்கு தான் வழமையாக செல்லும் பிரத்தியோக வகுப்புக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் ஆச்சி தேடுதலில் ஈடுப்பட்டதுடன் சிறுவன் காணாமற் போயுள்ளதாக இரவு 7.45 மணியலவில் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற நீட்ட டெனிம் காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு
052 2265 222, மற்றும் 076 366 6106 என்ற தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிசார் கேட்டுள்ளனர். R
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago