2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக துணை நிற்கும்

R.Maheshwary   / 2022 ஜனவரி 16 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

'இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான நிகழ்வு, நேற்று (15)  கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ​தெரிவித்த அவர்,

 

இன்று மலையகத்தை வழி நடத்துபவர்களாக ஜீவனும் , செந்தில் தொண்டமானும் உள்ளனர்.

மலையகத்தில் இந்திய உதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்திய வீட்டுத்திட்டங்கள் சில நிறைவடயும் நிலையில் உள்ளன.

இலங்கை மக்களின் தேவையறிந்து இந்தியா செயற்படுகின்றது. இதன்மூலம் இந்திய - இலங்கை உறவு சக்திமிக்கதாய் மாறுகின்றது. எதிர்காலத்தில் மலையகத்தில் பல வீட்டுத் திட்டங்ளை முன்னெடுப்போம். மலையக நண்பர்களின் வீடுக்கான கனவு நனவாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .