2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி

Kogilavani   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பா.திருஞானம் 

இந்திய அரசின் நிதியுதவியுடன், மலையகத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.   

“இந்தியா அரசானது, மலையக பாடசாலைகளுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்காக 95 மில்லியன் ரூபாய் நிதியை, இந்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் 15 பாடசாலைகள், இந்திய அரசின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதற்கான அனுமதியை, இந்திய அரசு வழங்கியுள்ளதாக, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது” என, கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.  

கண்டி, தமிழ் வர்த்தகச் சங்கத்தின் ஏற்பாட்டில், கண்டி ‘அவன்னல’ மண்டபத்தில், நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,  

“இந்திய அரசானது, மலையகக் கல்வி அபிவிருத்திக்காக, பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சராக நான் கடமைகளை பொறுப்பேற்ற போது, மலையகத்திலுள்ள 30 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரினேன். எனது கோரிக்கைக்கு அமைவாகவே, முதற்கட்டமாக, 15 பாடசாலைகள் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாக, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன்   தெரிவித்தார்.   

“அந்தவகையில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமனுக்கும் இந்திய அரசுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்திய வம்சாவளி மக்களுக்கு, உதவும் கடப்பாடு இந்திய அரசுக்கு உள்ளது” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .