2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்திய புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மொஹொமட் ஆஸிக்   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மாணவர்களிடமிருந்து, இந்திய புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை, கண்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயம் கோரியுள்ளது. 

இப்புலமைப்பரிசிலுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளே  விண்ணப்பிக்க முடியுமனெ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களது கல்வி அறக்கட்டளை' (சிலோன் எஸ்டேட் வேர்கர்ஸ் எடுயூகேசன் ட்ரஸ்ட்) மூலமே, மேற்படி புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.

க.பொ.த (உ.த), பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் பயிற்சிகள் தொழில்நுட்பத்துறை என்பவற்றில் கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்தே, இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள், க.பொ.த. (சா.த)இல் 6 திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் அல்லது  க.பொ.த.(உ.த) இல் சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரி,  பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபத்திரத்துடன் தனது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், க.பொ.த பெறுபேற்று படிவம், பெற்றோர் இறுதியாக பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட சம்பளப் படிவம் ஆகியவற்றின் நகல் பிரதிகள் மற்றும் பெற்றோரின் தொழில், வதிவு தொடர்பாக தோட்ட முகாமையாளரின் அறிக்கை அகிய ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை, www.ahcikandy.org. என்ற இணையத்தள்ளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று, கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.  அல்லது  கண்டி, ரஜபிள்ள மாவத்தை இல 31 இல் அமைந்துள்ள கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலும்  பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பப்பத்திரங்கள், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர்   Assistant High Commission of India, P.O.Box 47,  Kandy என்ற முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .