ஆ.ரமேஸ் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள், நகர் பகுதிகளில், இந்து மக்களால் கொண்டாடப்படும் சமய நிகழ்வுகளுக்கு, இந்துக்களின் வழிபாட்டு இலட்சினைகள் பொறிக்கப்பட்டுள்ள கொடிகளைப் பறக்க விட முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை, நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஆர்.கேதீஸ் முன்வைத்திருந்தார். இதன்போது, இந்தப் பிரேரணைக்கு, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியதையடுத்து, பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியாவில், பௌத்த மக்கள், கிறிஸ்தவ மக்களின் சமய நிகழ்வுகளின் போது, அவர்களின் மதம் சார்ந்த கொடிகளைப் பறக்கவிடும் அதேவேளை, இந்துக்களின் சமய நிகழ்வுகளின் போதும், இந்து இலட்சினை பொறிக்கப்பட்ட கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்ற நோக்கில், இந்தப் பிரேரணை, நுவரெலியா மாநகர மேயர் சந்தணலால் கருனாரத்தின, சபை உறுப்பினர்களின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டது.
இதனூடாக, வாழை மரங்கள், தென்னம் ஒலைகளினால் செய்யப்படும் அலங்காரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, சூழலும் பாதுகாக்கப்படுவதாக, ஆர்.கேதீஸ் தெரிவித்தார்.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago