2025 ஜூலை 05, சனிக்கிழமை

இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலபிட்டி, ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் ஒரு பகுதியினை நாய் ஒன்று எடுத்து வந்து கற்பாறையில் விட்டு சென்றதை இனங்கண்ட பிரதேச மக்கள், நாவலபிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற நாவலபிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு வருகைதந்த நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதாரா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கபட்ட நபர் 58 வயதுடையவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .