2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இனியும் பொறுமை கிடையாது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்,  உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கப் பெற வேண்டும்  என்றார்.

இத்தகைய அசமந்த நிலைமை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்ட  முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு,  தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு செய்தல் வேண்டும் என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்  பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். 

அப்பாவி தோட்டத் தொழிலாளியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

பசறை கனவரல்ல தோட்டத்தில் E.G.K பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் தொழில் புரியும் 24 வயதுடைய கணேசமூர்த்தி என்ற இளைஞர்,  தோட்ட அதிகாரியின் வீட்டில் நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X