2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

கினிகத்தேன,நாவலபிட்டி பிரதான வீதியில் உள்ள மீபிட்டிய பகுதியில், முச்சக்கர வண்டியொன்று இன்று (7) காலை 7.30 மணியளவில் குடைச் சாய்ந்ததில், அதன் சாரதி காயமுற்றுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முச்சக்கர வண்டியின், முன்சில்லு கழன்றமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பு, ஹட்டன் பிரதான வீதியில் சிறிய ரக லொறி ஒன்று இன்று (7) 10.30 மணியளவில் பாதையை விட்டு விலகிச் சென்றதால் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது லொறிச் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .