Editorial / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியிலுள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்விக்கற்ற 15 வயதான மாணவியான சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்தி, விடுதிக்கு அழைத்துச் சென்று அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றஞ்சாட்டின் பேரில், மாணவர்கள் இருவர், கண்டி தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் இவர்களை கைது செய்துள்ளனர்.
11 வயதான அந்த பாடசாலையின் மாணவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், கண்டியிலுள்ள பிரதான பாடசாலைகளில் கல்விப்பயிலும் மாணவர்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மாணவர்களில் ஒருவர், சிறுமியான அந்த மாணவியுடன் முதலாவதாக காதல் தொடர்பை கொண்டிருந்துள்ளார். அவர், கண்டி இரண்டாவது ராஜசிங்க மாவத்தையில் உள்ள ஒரே உரிமையாளரின் இரண்டு தங்கும் விடுதிகளுக்கு அந்த மாணவியை அவ்வப்போது அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அப்போது, அச்சிறுமியை நிர்வாணப்படுத்தி, புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வீடியோவாகவும், இருவரும் உடலுறவில் ஈடுபடுவதையும் பதிவுச் செய்துக்கொண்டுள்ளார். அந்த காதல் தொடர்பை இடையில் துண்டித்துக்கொண்டுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே மற்றுமொரு மாணவனுடன், காதல் வயப்படுவதற்காக அந்த சிறுமியான மாணவி, அவருக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் முதலாவது காதலனுக்கும் தெரிவித்துள்ளார். “நீ விரும்பியதை செய்துகொள்” என முதலாவது காதலன் தெரிவித்ததையடுத்து அந்த சிறுமி, மாணவனுடன் காதல்வயப்பட்டார்.
அவரும், அதே தங்குமிட விடுதிக்கு அழைத்துச் சென்று, அச்சிறுமியின் நிர்வாணப்படங்களை தன்னுடைய அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார். அத்துடன் வீடியோவாகவும் பதிவுச் செய்துக்கொண்டார்.
அந்த நிர்வாணப்படங்களை இணையத்தளத்தில், காதலர்கள் இருவரும் பதவியேற்றம் செய்தை அடுத்து, அம்மாணவி கல்விக்கற்ற பாடசாலைக்கு விவரம் தெரியவந்தது. உடனடியாக பாடசாலைக்குச் சென்ற மாணவியின் தாய், தனது மகளை அப்பாடசாலையில் இருந்து விலக்கிக்கொண்டார்.
வயது குறைந்த பெண் பிள்ளைக்கு தங்குமிட விடுதியை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தங்குமிட விடுதியின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் ணிப்புரையின் பிரகாரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி தேவிந்தி விக்கிரமசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷேன் செனவிரத்ன
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025