R.Maheshwary / 2021 நவம்பர் 19 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், டி சந்ரு
தலவாக்கலை நகரிலுள்ள 3 மாடி வர்த்தக நிலையம் ஒன்றில் 2 வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா கயப்புகலை பகுதியைச் சேர்ந்த போஹாதெனியாகே அபேரட்ண (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர், காலை 11 மணியளவில் தலவாக்கலை நகரிலுள்ள மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் 3 மாடி வர்த்தக நிலையமொன்றில் 2 மாடியில் பொருட்களை கொள்வனவு செய்துக்கொண்டிருந்தபோது, அங்கு இருந்த துவாரத்தினூடாக தவறி கீழே விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இந் நிலையில் அவசர அம்புலன்ஸ் வண்டியினூடாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago