Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 01 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக வேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியை பந்தாடி பதம் பார்த்துவிட்டு பஸ்தரிப்பிடத்தில் முட்டிமோதி நின்றுள்ளது.
ஹட்டன்-டிக்கோயாவில் இருந்து நோர்வூட் வரையிலும் அதிவேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமே டிக்கோயா- வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு, பஸ்தரப்பிடத்தையும் பதம் பார்த்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த லேண்ட் ரோவரின் சாரதியும் மற்றுமொருவரும் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லேண்ட் ரோவரின் சுக்கான் திடீரென செயற்பட மறுத்தமையை அடுத்தே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago