மொஹொமட் ஆஸிக் / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்று, கொக்கெயின் விவகாரம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதெனவும் இதனால், இரத்தப் பரிசோதனை செய்யவேண்டி வருமா என்று, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் கேள்வி கேட்பதாகவும் தெரிவித்த நீர் வளங்கள் மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன, கொக்கெயின் மட்டுமல்ல, எந்தவொரு போதைப்பொருளையும் தான் கண்ணால்கூட கண்டதில்லை என்பதால், இரத்தப் பரிசோதனை செய்துகொள்வதில் தனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில், நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கொக்கெயின் கதையைப் பரப்பிவிட்டவர் ஒரு நடிகர் என்பதால், அவர் நடிகர் என்ற முறையில் நகைச்சுவையாகக்கூட இதனைக் கூறியிருக்க வாய்ப்புண்டு என்றும், தற்போது அது குற்றச்சாட்டாக மாறியுள்ளதாகவும் சாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .