Editorial / 2024 ஜூன் 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதியில் சுற்றுச்சூழலை அழித்து அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு சந்தேக நபர்களை மஸ்கெலியா ரிகாத்தான் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
காசலரி நீர்த்தேக்கத்தில் பிரதானமாக நீர் பாயும் கெசல்கமுஓயா, மஹாஎலிய காப்புக்காட்டில் இருந்து ஆரம்பமாகி, காப்புக்காடு வழியாக பாயும் கால்வாய்களை ஒரு குழுவினர் அழித்து அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வதாக கிடைத்த தகவலின் பேரில், சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். .
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் பொகவந்தலாவ லோய்னோன் தோட்டத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், சந்தேகநபர்களுடன் மாணிக்கக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை சந்தேகநபர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
47 minute ago
2 hours ago